விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்
|விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள பழைய ரெயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 06891) நாளை (புதன்கிழமை) முதல் 21-ந்தேதி வரை பொன்மலை- திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் பொன்மலையுடன் நிறுத்தப்படும்.
அதேபோல் மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் திருச்சி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06892) திருச்சி ஜங்ஷன்- பொன்மலை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை முதல் 21-ந்தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் பொன்மலை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.09 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.