திருச்செந்தூர்-எழும்பூர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம்
|திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20606) நவம்பர் 5-ந் தேதி மட்டும் தாமதமாக இரவு 10.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும். அதேபோல, எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) நவம்பர் 6-ந் தேதி மட்டும் தாமதமாக காலை 7.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.
மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) 6-ந் தேதி மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.