< Back
மாநில செய்திகள்
சிலம்பு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
மாநில செய்திகள்

சிலம்பு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

தினத்தந்தி
|
19 Nov 2024 5:23 AM IST

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதாவது, இந்த ரெயில் (வ.எண்.20681) தாம்பரத்தில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் ரெயில் (வ.எண்.20682) அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

அதேபோல, எழும்பூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12667) வருகிற 21-ந் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.12668) நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி தென்னக ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்