< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம்
|30 Oct 2024 4:14 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால், சென்னை புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை(அக். 31) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி, அனைத்து புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்படும் என்று என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.