< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை எழும்பூர்-மதுரை வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவையில் மாற்றம்
|30 Nov 2024 5:15 AM IST
சென்னை எழும்பூர்-மதுரை வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22624) சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும்.
அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வாராந்திர அதிவிரைவு ரெயில் (22623) வருகிற 6-ந் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.