< Back
மாநில செய்திகள்
சென்னை தி.நகரில் 64 இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் - காவல் ஆணையர் அருண்
மாநில செய்திகள்

சென்னை தி.நகரில் 64 இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் - காவல் ஆணையர் அருண்

தினத்தந்தி
|
22 Oct 2024 1:48 PM IST

காவல்துறை செய்துள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். குறிப்பாக சென்னை தி.நகரில் கடந்த சில நாட்களாகவே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பேருந்து மற்றும் ரெயில்கள் மூலமாக மக்கள் தி.நகரில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னைல் தி.நகரில் காவல்துறை செய்துள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது;

தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மலர் பஜார் ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைக் கண்காணிக்கவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்லும் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காகவும் ஐந்து தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளும், 10 தற்காலிக உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தி.நகரில் கூடுதலாக 64சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, நடப்பு நிகழ்வுகளை (நேரலை) கண்காணிக்கும் வகையில், குற்றங்களும் கண்காணிக்கப்படுகின்றன. திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு, 19 பொது முகவரி அமைப்பு மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன." என தெரிவித்துள்ளார். .

மேலும் செய்திகள்