< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்; ஐ.ஜி.க்களுக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவு

29 Oct 2024 11:14 PM IST
5 கியூ பிரிவு ஐ.ஜி.க்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
.சென்னை,
கடந்த 1991-ம் ஆண்டு 'தடா' சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள், சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்படாமல் உள்ள நிலையில், போலீசார் தரப்பில் சென்னை கூடுதல் அமர்வு மேலும் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார். அதோடு 5 கியூ பிரிவு ஐ.ஜி.க்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, அபராத தொகையை வரும் நவம்பர் 29-ந்தேதிக்குள் சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.