< Back
மாநில செய்திகள்
அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
17 March 2025 1:29 PM IST

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சென்னை,

தமிழ்நாடு அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2018ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் பெரியகருப்பன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்