< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு - விசாரணை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு - விசாரணை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
30 Oct 2024 12:41 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

அப்போது, அமலாக்கத்துறை சாட்சியான தடயவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை நிறைவடையாததை அடுத்து, விசாரணையை நவம்பர் 7-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் தடயவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்