< Back
மாநில செய்திகள்
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்: டிரைவர் சடலமாக மீட்பு
மாநில செய்திகள்

சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்: டிரைவர் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
19 Dec 2024 12:11 AM IST

சென்னை துறைமுகத்தில் கடுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்த சம்பவத்தில் டிரைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை துறைமுகத்தில் கடலோர காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பணிக்காக துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று வர தனியாருக்கு சொந்தமான வாடகை கார் அமர்த்தபபட்டுள்ளது. இந்த காரை கொடுங்கையூரை சேர்ந்த முகமது சாதி (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

இதனிடையே, நேற்று இரவு 9 மணியளவில் கடலோர காவல் படை வீரர் ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென துறைமுகத்தில் உள்ள கடலுக்குள் பாய்ந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படை வீரர்கள் கடலில் மூழ்கி கிடந்த காரில் இருந்து காவல் படை வீரரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, காருடன் பாய்ந்து மாயமான டிரைவர் முகமது சாதியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கடலில் விழுந்து மாயமான டிரைவர் முகமது சாதி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கார் கடலுக்குள் பாய்ந்த பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இறந்த நிலையில் முகமது சாதி மீட்கப்பட்டார்.

முகமதுவின் உடலை மீட்ட கடலோர காவல்படையினர் பிரேத பரிசோதனைக்கு உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்