< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி அருகே கார் விபத்து; 2 பேர் பலி
|10 Nov 2024 11:49 PM IST
விக்கிரவாண்டி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்தது. இதில் அந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிறுவன் உள்பட 3 பேர் காயமடைந்தனர். உடனே அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். இதன்பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.