< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை அருகே கோர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
|9 Jan 2025 5:48 AM IST
ராணிப்பேட்டை அருகே லாரி மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை சிப்காட் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது, சென்னை நோக்கி காய்கறிகளை ஏற்றி வந்த லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.