< Back
மாநில செய்திகள்
சென்னை: மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்
மாநில செய்திகள்

சென்னை: மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்

தினத்தந்தி
|
20 Oct 2024 10:05 AM IST

கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் இருந்த 4 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் இருந்து நேற்று இரவு கோவளம் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர்.

ஈஞ்சம்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் காயமின்றி உயிர்தப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்