< Back
மாநில செய்திகள்
சி.ஏ. தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
மாநில செய்திகள்

சி.ஏ. தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தினத்தந்தி
|
24 Nov 2024 9:34 PM IST

சி.ஏ. தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையின்போது சி.ஏ. தேர்வுகள் நடைபெறுவதை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ.ன் (ICIA) முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வு தேதியை மாற்றியமைக்க ஐ.சி.ஐ.ஏ.வை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாசார பன்முகத்தன்மையை குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்