< Back
மாநில செய்திகள்
திருமங்கலம் சந்தையில் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய வியாபாரம் - ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மாநில செய்திகள்

திருமங்கலம் சந்தையில் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய வியாபாரம் - ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
11 Jan 2025 3:05 AM IST

திருமங்கலம் வாராந்திர சந்தையில் பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வாராந்திர ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் வியாபாரம் களைகட்டியது. இயல்பான விலையில் இருந்து கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையாகின. சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

இதன்படி வழக்கமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வர விற்கப்படும் ஆடுகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானதாகவும், சந்தையில் மொத்தம் 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்