< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கல்: பஸ் மீது லாரி மோதி கோர விபத்து - 3 பேர் பலி
|22 Nov 2024 11:02 PM IST
நாமக்கல்லில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மெட்டாலா அருகே தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
மெட்டாலா கோரையாற்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி, பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் லாரி, பஸ் டிரைவர்கள், பெண் என 3 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.