< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து கழன்ற `பிரேக் ஷூ'... முகத்தில் தாக்கியதில் விவசாயி பலியான பரிதாபம்
|26 Oct 2024 12:34 PM IST
ரெயிலின் பிரேக் ஷூ வேகமாக முகத்தில் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டிவயல் கிராமம் அருகே வந்தகொண்டிருந்த ரெயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது. அப்போது தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்த விவசாயி சண்முகவேல் என்பவரது முகத்தில் வேகமாக அது தாக்கியது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.