< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
|23 Oct 2024 8:06 AM IST
வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி,
காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் வேளச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வேளச்சேரி ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.