< Back
மாநில செய்திகள்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
6 Nov 2024 7:27 PM IST

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்