< Back
மாநில செய்திகள்
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Feb 2025 11:33 AM IST

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

சென்னை,

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

பின்னர் 26-ந்தேதி மாலை 5.30 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க வருகிற 25-ம் தேதி வருகை தரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்