< Back
மாநில செய்திகள்
அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று பாஜக வரிசையில் நிற்கவில்லை: எச்.ராஜா
மாநில செய்திகள்

அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று பாஜக வரிசையில் நிற்கவில்லை: எச்.ராஜா

தினத்தந்தி
|
16 Nov 2024 2:31 AM IST

கூட்டணி குறித்து பாஜகவுக்கு எந்த அவசரமும் இல்லை என்று எச்.ராஜா கூறினார்.

மதுரை,

மதுரையில் பாஜக ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று பாஜக வரிசையில் நிற்கவில்லை. தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவெடுக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி வைத்து 1 கோடி வாக்குகள் வாங்கின. ஆனால் பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் 80 லட்சம். எனவே கூட்டணி குறித்து பாஜகவுக்கு எந்த அவசரமும் இல்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே மக்களுடைய சமூக ஒழுக்கங்கள் கெட்டுப்போய் உள்ளது. போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது. தமிழக காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்