< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'2026 தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதே பிறந்தநாள் உறுதிமொழி' - உதயநிதி ஸ்டாலின்
|27 Nov 2024 10:04 PM IST
2026 தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதே தனது பிறந்தநாள் உறுதிமொழி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், முகாம் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனிடையே 'பிறந்தநாளன்று ஏற்றுக்கொண்ட உறுதிமொழி என்ன?' என்று செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்-அமைச்சராக்க கழக உறுப்பினர்களும், உடன்பிறப்புகளும் கடினமாக உழைத்து, தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தருவோம் என்பதே எனது பிறந்தநாள் உறுதிமொழி" என்று தெரிவித்தார்.