< Back
மாநில செய்திகள்
சென்னையில் பைக் ரேஸ்; 242 வாகனங்கள் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னையில் பைக் ரேஸ்; 242 வாகனங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
1 Jan 2025 1:32 PM IST

புத்தாண்டையொட்டி சென்னையில் 425 இடங்களில் போலீசார் நேற்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் வீலிங், ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதனை மீறி பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டையொட்டி நேற்று இரவு சென்னையில் 425 இடங்களில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியது மற்றும் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்