< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் - ஜி.கே.வாசன்
|27 Oct 2024 1:41 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் சார்பிலே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொது வாழ்வில் பெருந்தலைவர் காமராஜரது நேர்மை, எளிமை, தூய்மையைப் பின்பற்றும் வகையிலே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் சார்பிலே மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.