< Back
மாநில செய்திகள்
விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் - அருண் விஜய்
மாநில செய்திகள்

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் - அருண் விஜய்

தினத்தந்தி
|
19 Nov 2024 6:14 PM IST

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம், என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் அருண் விஜய் கூறியதாவது ,

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமான பயணமாக அமைய என்னுடைய வாழ்த்துகள் . அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் . என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்