< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்கள் இன்று ரத்து
|17 Nov 2024 2:21 AM IST
பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மாலை 5 மணி முதல் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதே சமயம் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை பல்லாவரம் இடையே இரு மார்க்கத்திலும் காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணிவரை வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் மொத்தம் 35 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இப்பணிகள் முடிவடைந்த பின்னர் மாலை 5 மணி முதல் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.