< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் குளிக்க தடை

தினத்தந்தி
|
1 Nov 2024 6:50 PM IST

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக இன்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து 5 மணிநேரம் களித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தற்போது மாலை நேரத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறையை சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ள நிலையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்