< Back
மாநில செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; கல்லார் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி கலெக்டர்
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்; கல்லார் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி கலெக்டர்

தினத்தந்தி
|
16 Feb 2025 6:40 PM IST

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பாக கல்லார் சோதனை சாவடியில் நீலகிரி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்திற்கு பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டால் அந்த பேருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாவட்ட எல்லைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரியின் நுழைவுப்பகுதியான கல்லார் சோதனை சாவடியில், நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

வார விடுமுறையையொட்டி நீலகிரிக்கு இன்று அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், பேருந்துகள் மற்றும் கார்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்