< Back
தமிழக செய்திகள்

நாமக்கல்
தமிழக செய்திகள்
ஆன்லைன் ரம்மி: ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

2 April 2025 2:58 PM IST
ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தேவர்மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஈரோடு மாவட்டம் முத்தூரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, ஜெயக்குமார் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார்.
மேலும், ஆன்லைன் ரம்மியில் விளையாட 2 லட்ச ரூபாய் தரும்படி மனைவியிடம் ஜெயக்குமார் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மியில் 10 லட்ச ரூபாய் இழந்த ஜெயக்குமார் நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நெய்க்காரம்பட்டியில் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.