< Back
மாநில செய்திகள்
மெட்ரோ ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை

தினத்தந்தி
|
28 Oct 2024 7:09 PM IST

சென்னை மெட்ரோ ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. 2022-ம் ஆண்டு சட்ட பிரிவு 61-ன் கீழ் மெட்ரோ ரெயிலில் பட்டாசுகள் உட்பட எளிதில் எரியக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்