< Back
மாநில செய்திகள்
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
21 Nov 2024 10:38 AM IST

சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானம், அவசரமாக மதுரையில் தரையிறங்கியது.

மதுரை,

சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பேர் பயணித்தனர்.

இன்று காலை விமானம் புறப்பட்டு சென்ற நிலையில் தூத்துக்குடி சென்றதும் அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்கு தரையிறக்க முடியவில்லை. சில நிமிடங்கள் வானிலேயே விமானம் வட்டமடித்தது.

வானிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால் உடனடியாக மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மதுரை விமானநிலையத்தில் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பயணிகள் அனைவரும் மதுரையிலேயே இறங்கினர். அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் .

மேலும் செய்திகள்