< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை - 5 பேர் கைது
மாநில செய்திகள்

ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை - 5 பேர் கைது

தினத்தந்தி
|
3 Nov 2024 3:39 PM IST

ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தொடர்பாக 4 பெண் புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு,

தஞ்சாவூரைச் சேர்ந்த நித்யா என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு ஈரோட்டுக்கு வந்து பேருந்து நிலைய பகுதியில் தங்கியுள்ளார். அப்போது சந்தோஷ் குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை விற்று விடலாம் என நித்யாவிடம் சந்தோஷ் குமார் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார், பெண் இடை தரகர்களான ஈரோட்டைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார். அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர்.

இறுதியாக 4 லட்ச ரூபாய்க்கு அந்தப் பெண் குழந்தை விற்கப்பட்ட நிலையில், குழந்தையின் நினைவாகவே இருந்த நித்யா, இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சந்தோஷ் குமார், செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தம்பதியினரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்