< Back
மாநில செய்திகள்
பயணிகள் கவனத்திற்கு.. இன்று மின்சார ரெயில் சேவை ரத்து: தென்மாவட்ட ரெயில் சேவையிலும் மாற்றம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு.. இன்று மின்சார ரெயில் சேவை ரத்து: தென்மாவட்ட ரெயில் சேவையிலும் மாற்றம்

தினத்தந்தி
|
6 March 2025 6:58 AM IST

கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 7 மின்சார ரெயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை (1 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில் சேவை ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12.28, 12.40, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும், கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டில் இருந்து இதே தேதிகளில் காலை 10.40, 11, 11.30, மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரையில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.15, 1.15, 1.30, 2 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து மதியம் 12.05, 12.35, 1 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரெயில் மார்ச் 06, 07ம் தேதிகளில் தாம்பரத்தில் நிறுத்தம்,

மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரெயில் மார்ச் 8ம் தேதி தாம்பரத்தில் நிறுத்தம்.

நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ம் தேதி செங்கல்பட்டில் நிறுத்தம்.

தூத்துக்குடி சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ம் தேதி மாம்பலத்தில் நிறுத்தம்

மண்டபம் - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரெயில் மார்ச் 8ம் தேதி தாம்பரத்தில் நிறுத்தம்,

புதுச்சேரி - சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்,

சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரெயில் மார்ச் 06, 07ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்,

சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையேயான பயணிகள் ரெயில் மார்ச் 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும்,

சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரெயில் மார்ச் 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும்,

சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் மார்ச் 6, 7ம் தேதிகளில் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் சேவையில் மாற்றம்:-

மின்சார ரெயில் சேவை ரத்து:-

மேலும் செய்திகள்