
மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்ப முயற்சி- நிர்மலா சீதாராமன் தாக்கு

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சி நடக்கிறது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கை குறித்த பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நிதிலை அறிக்கை குறித்து, மாணவர்கள், பொது மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு விவாதம் இருந்து வருகிறது. தமிழகம் 1 ரூபாய் கொடுத்தால், திருப்பி 7 பைசா கூட வழங்கப்படவில்லை என்ற விவாதமே தவறு. தமிழகத்தில் கோவை, சென்னை மாவட்டங்களே வருவாய் அதிகம் வழங்குகிறது. அதனால், மற்ற மாவட்டங்களுக்கு திட்டங்கள் வழங்க கூடாது என கூற முடியாது.
மத்திய அரசு தமிழத்திற்காக இன்னும் எவ்வளவோ செய்தவதற்கு இருந்தாலும், மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சிகள் நடக்கிறது. மத்திய அரசு தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்க கட்டுப்பட்டுள்ளோம். நான் இங்கு நடக்கும் ஊழல் குறித்து பேசவிரும்பவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.