< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
லஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்

7 Dec 2024 9:01 PM IST
லஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக செயல்பட்டு வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்தபோது லஞ்ச புகாரில் சிக்கினார்.
கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா சென்ற காரில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத சுமார் 12 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஜஹாங்கீர் பாஷா கடந்த மாதம் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், லஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.