கவர்னரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது - சபாநாயகர் அப்பாவு
|கவர்னரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்து பேசியதாவது:-
சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேற அதிமுகவினரே காரணம். கவர்னருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது.
கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். கவர்னரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க கவர்னருக்கு உரிமை இல்லை.
கவர்னர் உரையின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது; வெட்டி, ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டுபிடித்ததால் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை தரப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை கொடுக்க கவர்னர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. தமிழக மக்களை கவர்னர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.