< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சற்று நேரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னர் ஆர்.என்.ரவி வருகை
|6 Jan 2025 9:31 AM IST
சட்டசபைக்கு வருகை தந்த கவர்னருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.