< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வின் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டது - எடப்பாடி பழனிசாமி
|19 Dec 2024 7:58 PM IST
திமுக அரசுக்கு நல்ல திட்டங்கள் என்றாலே பிடிக்காது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது;
" திமுக அரசுக்கு நல்ல திட்டங்கள் என்றாலே பிடிக்காது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் அற்புதமான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. குடிமராமத்து, தாலிக்கு தங்கம், மினி கிளினிக் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. ஏழைக்கு உதவும் எந்த திட்டமும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிடிப்பதில்லை.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க, கஞ்சா போதையே காரணம், குழந்தைகளை பள்ளிக்கு நிம்மதியாக அனுப்ப முடியவில்லை. தமிழகத்தில் அவல ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்று துவங்கப்பட்ட கட்சி தான் அதிமுக."
இவ்வாறு அவர் பேசினார்.