< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்று என்பதே தவறு - சீமான் பேட்டி
|11 Nov 2024 3:59 PM IST
தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்று என்பதே தவறு என்று சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை முடித்து வைக்கும் தி.மு.க. அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறது. வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும். அதிகாரம் என்பது நிலையானது அல்ல. தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வரும்போது அனைத்தும் பொட்டலாகி விடும்.
தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்று என்பதே தவறு. அது எப்படி கொலைகாரனும், கொலையானவனும் ஒரே ஆளாக இருக்க முடியும். தமிழ்த் தேசியம் கடற்கரையை காக்கும், திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும். தமிழ்த் தேசியம் ஆட்சிக்கு வந்தால் கல்லறையை இடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.