< Back
மாநில செய்திகள்
கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
மாநில செய்திகள்

கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

தினத்தந்தி
|
8 Jan 2025 7:25 PM IST

கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் சங்கரன் வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாராயணபுரம் கல்லம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 7.3.2021 அன்று கோபிமொடச்சூர் சங்கரன் வீதியில் உள்ள குலதெய்வம் கோவில் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது சங்கருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவினர் முருகன் (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் அன்று இரவு வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தபோது அங்கு வந்த முருகனும், அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (45) என்பவரும் சங்கரை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போது கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் இருந்தார். இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சோமசுந்தரம் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்துக்கு, பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்