< Back
மாநில செய்திகள்
தவெகவினர் கைது: என்.ஆனந்த் கண்டனம்
மாநில செய்திகள்

தவெகவினர் கைது: என்.ஆனந்த் கண்டனம்

தினத்தந்தி
|
2 March 2025 4:29 PM IST

தர்மபுரியில் போராட்டம் நடத்திய தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு என்.ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தர்மபுரி மாவட்டம் கரஹள்ளி சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில், இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கரகஅள்ளி சுங்க சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வெற்றிக் கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றென்றும் களத்தில் நிற்கும். அராஜக போக்குடன் கைது செய்யப்பட்ட கழகத் தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்