பகுதிநேர ஆசிரியர்கள் கைது - திமுக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
|முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகுதி நோ ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. நூறு நாட்கள் என்று கூறி, இன்றைக்கு ஆயிரம் நாட்களையும் கடந்து, இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. இது குறிந்து அவர்கள் குடும்பத்துடன் இன்றைக்கு, கோட்டையை நோக்கி பேரணி நடத்திய போது கைது செய்து, காவல் துறைவை வைத்து அடக்கு முறையை ஏவி விட்டுள்ளனர் .பருதி நேர ஆசிரியர்களைக் கைது செய்ததை தேசிய முற்போக்கு திரானிட கழகத்தின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வு எழுகி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவமணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.