திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
|சென்னையில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை,
கன்னியாகுமரி கடலின் நடுவே திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாளை கன்னியாகுமரி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.