< Back
மாநில செய்திகள்
த.வெ.க.வில் தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்
மாநில செய்திகள்

த.வெ.க.வில் தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

தினத்தந்தி
|
23 Oct 2024 6:32 PM IST

தவெக மாநாட்டிற்காக, தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்க வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் ஆணைக்கிணங்க வரும் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவரின் ஒப்புதலோடு மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவைடான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்