< Back
தமிழக செய்திகள்
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழக செய்திகள்

கோவையில் அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தினத்தந்தி
|
25 Feb 2025 8:09 AM IST

கோவையில் அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

கோவை,

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணியில் இருந்து கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அம்மன் அர்ஜுனன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது.

சோதனைக்கு அம்மன் அர்ஜுனனும் ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அது தொடர்பாக விளக்கம் கேட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து தகவல் அறிந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தனர். இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 962 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்