< Back
மாநில செய்திகள்
செய்தியாளர் சந்திப்பில் விஜய் போட்டோவை காட்டிய இளைஞர் - வானதி சீனிவாசன் அளித்த பதில்
மாநில செய்திகள்

செய்தியாளர் சந்திப்பில் விஜய் போட்டோவை காட்டிய இளைஞர் - வானதி சீனிவாசன் அளித்த பதில்

தினத்தந்தி
|
17 Nov 2024 4:48 PM IST

செய்தியாளர் சந்திப்பின்போது இளைஞர் ஒருவர் விஜய் போட்டோவை காட்டியது குறித்து வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

கோவை,

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், சமீபத்தில் செய்தியாளர்கள சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் தனது செல்போனில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யின் போட்டோவை காட்டிச் சென்றார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "நானும் அந்த வீடியோவை பார்த்தேன். யார் வேண்டுமானாலும் எங்கள் பின்னால் வந்து நிற்கும் அளவிற்கு பா.ஜ.க. கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது. இதே போல் வேறு ஒரு கட்சியின் கூட்டத்தில் யாராவது செய்து விட முடியுமா? எது பாசிசம், எது கருத்து சுதந்திரம் என்பதையெல்லாம் இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்