< Back
மாநில செய்திகள்
அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது.. - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
மாநில செய்திகள்

"அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது.." - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
23 March 2025 10:57 AM IST

அண்ணாமலை மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடந்ததாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "சொந்த மாநிலம் மீது அண்ணாமலைக்கு அக்கறை இல்லை. பா.ஜ.க.வுக்கே விசுவாசம் காட்டுகிறார். நேற்றைய கூட்டம் குறித்து அண்ணாமலை பேசுவது முக்கியமல்ல பிரதமர், உள்துறை மந்திரியின் கருத்தே முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் கட்சிக்கு வேலை மட்டுமே செய்கிறார். அவர் வேலையை அவர் செய்யட்டும்" என்று கூறினார்.

இதனையடுத்து மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளுமன்றம் குறித்து பேசலாம்" என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்