< Back
மாநில செய்திகள்
குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை - அமைச்சர் சேகர் பாபு
மாநில செய்திகள்

குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை - அமைச்சர் சேகர் பாபு

தினத்தந்தி
|
16 March 2025 11:40 AM IST

விலாசமற்ற அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை வடபழனி கோவிலில் 4 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் திருமண ஜோடிகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினார்.இதில் தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி, இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகா தேவி, முல்லை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு,

வேளாண் பட்ஜெட்டில் பொய்யும் புரட்டும் தான் இருக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை. எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தலைவர் எனில் அது அண்ணாமலைதான். வேளாண் பட்ஜெட்டை உண்மையான விவசாய மக்கள் வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

மேலும் செய்திகள்