< Back
மாநில செய்திகள்
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் - அடுத்த மாதம் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

வீரதீரச் செயல்களுக்கான 'அண்ணா பதக்கம்' - அடுத்த மாதம் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
22 Nov 2024 1:59 AM IST

குடியரசு தினவிழாவின்போது முதல்-அமைச்சர் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்குவார்.

சென்னை,

வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 3 பேருக்கும், அரசு ஊழியர்கள் 3 பேருக்கும் இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பதக்கம் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

2025-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு குடியரசு தினவிழாவின் போது முதல்-அமைச்சர் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்குவார்.

மேலும் செய்திகள்