< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விஜய் கட்சியுடன் கூட்டணியா? - செல்வப்பெருந்தகை பதில்
|22 Nov 2024 9:20 AM IST
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
தென்காசி,
தென்காசியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தற்போது இந்தியா கூட்டணி ஒற்றுமையுடனும் வலிமையாகவும் உள்ளது.
இனிவரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி எங்கு உள்ளதோ, அந்த கூட்டணி வெற்றி பெறும். தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.